ஓட்டுப்போட போன நிறைமாத கர்ப்பினி! அங்க என்ன ஆச்சு தெரியுமா! பரபரப்பான தகவல்!

533

திருவண்ணாமலை மாவட்டம் பெருந்துறைப்பட்டு கிராமத்தை சேர்ந்த தம்பதி ரகு-நீலாவதி. இவர்கள் வேலை நிமித்தமாக கோவையில் தங்கி இருக்கிறார்கள். 33 வயதான நீலாவதி, நிறைமாத கர்ப்பிணி ஆவார்.

இந்நிலையில் இவர் வாக்கு செலுத்தவதற்காக அவரது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். வாக்கு சாவடிக்குள் சென்ற அவருக்கு ஓட்டும் போடும் போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அப்போது அதே பகுதியை சார்ந்த 108 ஆம்புலன்ஸ் டெக்னீஷியன் ஒருவர் அதே பூத்திற்கு ஓட்டு போட வந்திருக்கிறார். பிரவச வலியில் நீலாவதி துடிப்பதை பார்த்ததும், உடனடியாக அந்த இடத்திலேயே பிரசவம் பார்ப்பது நல்லது என அறிவுறுத்தி உள்ளார்.

உடனே உறவினர்களின் உதவியுடன் நீலாவதிக்கு சுக பிரசவம் ஆனது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்புடன் கூடிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of