மாடியில் இருந்து தவறி விழுந்த கைக்குழந்தை!

718

துருக்கியில் இஸ்தான்புல் மாவட்டத்தில் உள்ள fatih எனும் நகரில், மாடியில் இருந்து தவறி விழும் குழந்தையை இளைஞர் ஒருவர் காப்பாற்றும் வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில்,

“இளைஞர் ஒருவர் ஒரு குடியிருப்பின் முன்புறும் நின்றுக்கொண்டிருக்கிறார். திடீரென அந்த இளைஞர் மேலே பார்க்கிறார்.

அப்போது, அந்த குடியிருப்பின் இரண்டாவது மாடியில் இருந்து ஒரு குழந்தை கீழே விழுகிறது.

குழந்தை கீழே விழுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், புத்திசாலித்தனமாக தான் நிற்கும் இடத்தை அதற்கேற்றவாறு அமைத்துக் கொண்டு குழந்தை விழுந்ததும் தக்க சமயத்தில் பிடித்துக் கொண்டார்.

இதனால் சிறுகாயமும் இல்லாமல் குழந்தை உயிர் பிழைத்துக் கொண்டது.”

இவர் செய்த இந்த செயலுக்காக பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of