3 தலைகளுடன் பிறந்த பெண் குழந்தை

472

உத்தரப்பிரதேசத்தில் 3 தலைகளுடன் பிறந்த பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

எட்டாவா மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை 3 தலைகளுடன் இருப்பது கண்டு மருத்துவர்களும், உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

பிரதான தலைப் பகுதியை ஒட்டி 2 தலைகள் இருப்பது போன்று பிறந்தாலும் அவற்றில் கண்கள், மூக்கு போன்ற உறுப்புக்கள் இல்லை.

குழந்தை உயிர்பிழைக்க 55 சதவீத வாய்ப்பே இருப்பதாகவும் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்பும் அதன் மூளை வளர்ச்சி சீராக இருக்குமா என்பது சந்தேகத்துக்குரியது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of