அரசு மருத்துவமனையில் கூலாக குழந்தை கடத்தல்! வெளியான பகீர் வீடியோ!

496

பொள்ளாச்சி அடுத்த காளியாபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலன் என்பவரின் மனைவி தேவிக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர், தனது உறவினர் இங்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறி தேவியிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டும், குழந்தையை கவனித்து வந்துள்ளார்.

இதனிடையே தேவியை டிஜ்சார்ஜ் செய்ததால் அவரது கணவர் தேவியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தபோது தானும் வருவதாகக் கூறி அந்தப் பெண் குழந்தையை தூக்கி வந்துள்ளார். கணவர் மருந்து வாங்க சென்றநிலையில், அந்த பெண் குழந்தையுடன் தலைமறைவாகிவிட்டார்.

இது குறித்து தம்பதியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், குழந்தையை கடத்தி சென்ற பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of