சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ஆண் குழந்தை கடத்தல்.. – மர்ம பெண்ணுக்கு வலைவீச்சு..!

476

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நூதன முறையில் குழந்தை கடத்தல் சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் கள் ஜானி- ரந்தோஷ் தம்பதி. இவர்களுக்கு ஜான் என்ற 8 மாத ஆண் குழந்தை உள்ளது. சென்னை மெரினா கடற்கரை மணற்பரப்பில் தங்கி பலூன் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை இவர்களின் குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பெண் ஒருவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வளாகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தைக்கு ஆடை மாற்ற வேண்டும் எனக்கூறி தம்பதிகளை ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு, குழந்தையை தூக்கிக் கொண்டு மர்ம பெண் சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அந்த பெண்ணை காணவில்லை. இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸார் மருத்துவமனை வளாக சிசிடிவி காட்சி பதிவுகள் உதவியுடன் மர்ம பெண்ணை அடையாளம் கண்டறித்துள்ளனர். தொடர்ந்து அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement