டாப்ஸி- அமிதாப் பச்சன் மீண்டும் இணையும் சஸ்பென்ஸ் திரில்லர் படம்

645

சில ஆண்டுகளுக்கு முன்பு அமிதாப் பச்சன், டாப்ஸி உள்ளிட்டோர் நடித்து வெளியாகிய மாபெரும் வெற்றியடைந்த படம் ‘பிங்க்’. இந்தப் படத்தில் வழக்கு ஒன்றில் சிக்கியிருக்கும் டாப்ஸியை, காப்பாற்றும் வழக்கறிஞராக அமிதாப் நடித்திருப்பார்.

இந்நிலையில், இதே போல் கொலை வழக்கு ஒன்றில் சிக்கிய டாப்ஸியை காப்பாற்றும் வழக்கறிஞராக அமிதாப் தோன்றும் புதிய படமான ‘பட்லா’ டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்தப் படம் ‘தி இன்விசிபில் கெஸ்ட்’ என்ற ஸ்பானிஷ் மொழி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகியுள்ளது.

படத்தை சுஜாய் கோஷ் இயக்கியுள்ளார். ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. திருமணமாகி, பெண் குழந்தைக்கு தாயாக இருக்கும் டாப்ஸி வேறு ஒருவருடன் ரகசிய உறவு வைத்துள்ளார்.

இதையறிந்த பெயர் தெரியாத நபர் ஒருவர் அவர்களை மிரட்டும் நிலையில், டாப்ஸியிடம் பழக்கம் வைத்திருந்த அந்த நபர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்துவிடுகிறார்

இந்த திட்டமிட்ட சதியில் சிக்கிக்கொள்ளும் டாப்ஸி, குற்றமற்றவள் என்பதை நிரூபிக்க, இதுவரை எந்த வழக்குகளிலும் தோற்காத வழக்கறிஞராகத் திகழும் அமிதாப் வாதாடும் விதமாக படத்தின் கதை அமைந்துள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ரிலிஸுக்காக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement