பாஜகவில் இணைந்தார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா

240

அண்மைகாலமாகவே பாஜகவில் பிரபலங்கள் பலர் இணைத்து வருகின்றனர், இந்நிலையில் தற்போது இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜகவில் இணைந்துள்ளார்.

அரியானாவில் பிறந்த சாய்னா இப்பொது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் இந்தியாவிற்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாடி பல பதக்கங்களை பெற்றுள்ளார்.

இந்நிலையில், இன்று சாய்னா நேவால் மற்றும் அவரது சகோதரி டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தனர். கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அர்ஜூன் சிங் முன்னிலையில் சாய்னா பாஜகவில் இணைந்துள்ளார். சாய்னா நேவால் மற்றும் அவரது சகோதரியை அர்ஜூன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement