ரயில்வே டிராக்கில் பதுங்கி இருந்த பேக்..! போலீசுக்கே அல்வா கொடுத்த அந்த நபர்..!

452

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து மத்திய அரசின் மூலம் ரத்து செய்யப்பட்டது. இந்த அறிவிப்புக்கு, பாகிஸ்தான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே இந்தியாவில் பயங்கரவாதிகள் நுழைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியது.

இதனால் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வரும் நிலையில், திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் தனியாக பேக் ஒன்று இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அந்த பொருளை வெடிகுண்டு நிபுணர்களை வைத்து சோதனை செய்தனர். அதில் பாம் இல்லை என்று தெரிய வந்தது. என்ன தான் இதில் உள்ளது என்று போலீசார் பேக்கை திறந்து பார்த்த போது, அதில் அல்வா பொட்டலங்களும், ஒரு ஆதார் அட்டையும் இருந்துள்ளது.

அந்த ஆதார் அட்டையை எடுத்து போலீசார், அதில் இருந்த நம்பருக்கு போன் செய்து இந்த பேக்கின் உரிமையாளர் பேக்கை பெற்றுக்கொள்ளும் படி கூறினர்.

ஏற்கனவே பயங்கரவாதிகள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ரயில்வே டிராக்கில் பேக் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of