மின் கட்டணம் கட்டாததால் மாயாவதியின் வீட்டில் மின் இணைப்பு துண்டிப்பு..!

326

உத்தபிரதேச மாநிலம் நொய்டாவின் பதல்பூர் பகுதியில் உள்ள மாயாவதியின் வீட்டில் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.

67 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்திருந்ததால், மாயாவதியின் வீட்டுக்கு மின் இணைப்பைத் துண்டித்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மாயாவதியின் குடும்பத்தினர் 50 ஆயிரம் ரூபாயை செலுத்தியதால், அவரது வீட்டுக்கு மீண்டும் மின் இணைப்புக் கொடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என்றும்  எங்கெல்லாம் மின் கட்டணம் நிலுவையில் உள்ளதோ அந்த வீடு மற்றும் நிறுவனங்களில் மின் இணைப்பைத் துண்டிக்கும் பணியை மின் வாரிய ஊழியர்கள் மேற்கொண்டு வருவதாகவும் மின்வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement