பிரதமர் குறித்து சர்ச்சை பேச்சு – நெல்லை கண்ணனுக்கு இன்று ஜாமீன்

422

டிசம்பர் 29ம் தேதி நெல்லை மேலப்பாளையத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த 2-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலப்பாளையம் காவல் நிலையத்தில் காலை, மாலை என இரு வேளையும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 10ஆயிரம் ரூபாய், பிணை தொகையாக நீதிமன்றத்தில் கட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.