அடுத்த 2 தினங்களுக்கு மழை நீடிக்கும் – பாலச்சந்திரன்

221

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை நீடிக்கும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல துறை தலைவர் பாலச்சந்திரன், தமிழகத்தை பொருத்தவரை வளிமண்டலத்தில் கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும் இதன் காரணமாக வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு என்றும், சென்னையில் இடைவெளிவிட்டு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 8 சென்டிமீட்டர் மழையும், காவேரிப்பாக்கத்தில் 5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.