பாலாவின் வர்மா.. OTT-ல் ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ தகவல்..

1457

நடிகர் விஜய் தேவராகொண்டா நடிப்பில், தெலுங்கில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. இந்த திரைப்படம், தமிழில் இயக்குநர் பாலா இயக்கத்தில் வர்மா என்ற பெயரில் எடுக்கப்பட்டது.

படம் முழுவதும் எடுத்து முடிக்கப்பட்ட பின்னர், இந்த திரைப்படம் நன்றாக வரவில்லை என்றும், உயிரோட்டமாக இல்லை என்றும் கூறி, தயாரிப்ப நிறுவனம் அப்படத்தை கைவிட்டது. மேலும், வேறொரு இயக்குநரை வைத்து மீண்டும் எடுக்கப்பட்டது.

அதன்பிறகு, ஆதித்யா வர்மா என்ற பெயரில் மீண்டும் அந்த திரைப்படம் வெளியானது. அதில், துருவ் விக்ரமின் நடிப்பு பலராலும் பெரிதாக பேசப்பட்டது. ஆனால், பாலா வெர்சனில் எடுக்கப்பட்ட திரைப்படத்தை ஒடிடியில் வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வந்தனர்.

இந்நிலையில், ரசிகர்களின் ஆசை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சிம்பிளி சவுத் என்ற ஒடிடி தளத்தில் வரும் 6-ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.