கோழிக்கோடு விமான விபத்து – பெரிய விமானங்கள் தரை இறங்க தடை

316

விமான விபத்தை தொடர்ந்து, கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் மழைக்காலத்தில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வந்தேபாரத் திட்டத்தின் கீழ், கடந்த 7ஆம் தேதி துபாயில் இருந்து கேரளா வந்த ஏர் இந்தியா விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முதன்மை விமானி சாதே, துணை விமானி உள்பட 18 பேர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக விமானத்தின் கறுப்பு பெட்டி கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்கத், சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் தடை விதித்துள்ளது.

மழைக்காலங்களில் மிகப்பெரிய அமைப்பு கொண்ட விமானங்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு விமான விபத்தை தொடர்ந்து, மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Advertisement