பள்ளி மாணவிகளிடம் காதலை சொல்லும் காட்சிகளுக்கு தடை?

567

திரைப்படங்களில் பள்ளி மாணவிகளிடம் காதலை சொல்வது போன்ற காட்சிகளை தணிக்கை குழு அனுமதிக்கக் கூடாது என ஓய்வு பெற்ற IAS அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில், தமிழ்நாடு சமூகநலத்துறை மற்றும் இந்திய குழந்தைகள் நலச்சங்கம் சார்பில் குழந்தை திருமணம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.

இதில், பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய தலைவரும், ஓய்வு பெற்ற IAS அதிகாரியுமான நிர்மலா தேவி, இந்திய அளவில் ஆண்டுக்கு 18 லட்சம் குழந்தை திருமணங்கள் நடைபெறுவதாகவும், இதில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் தான் 66 ஆயிரத்து 200 குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், திரைப்படங்களில் பள்ளி மாணவிகளிடம் காதலைச் சொல்வது போன்ற காட்சிகளை தணிக்கை குழு அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினார்.