சென்னையில் வசூலை அள்ளும் வாழை இலை

2244

தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்தது மட்டுமில்லாமல் இதனை கடுமையாக கடைபிடித்தும் வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் இயங்கிவரும் சிறிய ஓட்டல் முதல் பெரிய ஓட்டல் வரை பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக வாழை இலைகள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.இதனால் வாழை இலையின் வியாபாரம் சூடுபிடிக்கத்தொடங்கியது. வாழை இலையின் வியாபாரம் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் அதிகமாக விற்பனையாகி வருகின்றனர்.

சராசரியாக நாள் ஒன்றுக்கு 20 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதில் கற்பூர வள்ளி, மஞ்சள் வாழை, பச்சை வாழை, ரஸ்தாலி வாழை என பல வகைகள் உள்ளனர்.

இதன் விலையும் அதன் தரத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகின்றனர், ஆரம்ப விலை 200 ரூபாயில் தொடங்கி 1000 ரூபாய் வரை விற்கப்படுகின்றனர்.

Advertisement