மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணி

427

பா.ஜ.க-வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் இன்று பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த பொதுக்கூட்டம் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பரூக் அப்துல்லா, அகிலேஷ் யாதவ், டெல்லி மற்றும் ஆந்திரா மாநில முதலமைச்சர்கள் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்க கொல்கத்தா வந்துள்ளனர். இந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்கவில்லை.

எனினும், அக்கட்சி சார்பில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய தலைவர்கள் கொல்கத்தாவில் குவிந்துள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of