மெரினா பீச்சில் குழந்தைகளுக்கு பஞ்சு மிட்டாய்.. கதறி அழுத பவித்ரா.. கத்தியை எடுத்து கழுத்தை அறுத்த தாய்..!

742

பெங்களூருரை சேர்ந்தவர் பவித்ரா. 32 வயதாகிறது. கல்யாணம் ஆகி பெங்களூருவில் வசித்து வருகிறார். தனுஷ்யா என்ற 6 வயது மகளும், பத்மேஷ் என்ற 3 வயது மகனும் உள்ளனர்.

ஆனால் பவித்ராவுக்கு கணவனுடன் ஒன்றரை வருஷமாக சண்டை உள்ளது. இது நேற்று முன்தினமும் அதிகமாகிவிட்டது. அதனால் பவித்ரா கோபித்து கொண்டு, பெங்களூருவில் இருந்து மகள், மகளுடன் சென்னைக்கு பஸ் ஏறி விட்டார்.

சென்னையில் எங்கே போவது என்றே தெரியவில்லை. அதனால் நேத்து ராத்திரி மெரினா பீச்சுக்கு வந்தார். குழந்தைகளுடன் பீச்சில் விளையாடினார்.

பிள்ளைகள் பஞ்சு மிட்டாய் கேட்கவும் அதையும் வாங்கி தந்தார்.
அப்படியே விவேகானந்தர் இல்லம் அருகே குழந்தைகளுடன் வந்து உட்கார்ந்தார் பவித்ரா.

மனதெல்லாம் பிரச்சனைகள் வெடித்து சிதறி கொண்டிருந்தது.. கண்களில் தாரை தாரையாக தண்ணீர்.. குழந்தைகளை வெறித்து பார்த்த பவித்ரா, திடீரென கையில் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து முதலில் தனுஷ்யாவை துடிக்க துடிக்க கழுத்தை அறுத்துவிட்டார்.

பிறகு மகனின் கழுத்தையும் அதேபோல அறுத்தார். 2 குழந்தைகளும் வலி தாங்க முடியாமல் கதறி துடித்து ரத்த வெள்ளத்தில் விழுந்தன. இந்த சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் பவித்ரா, அதே கத்தியால் தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்ததும் பொதுமக்கள் அலறி கத்தினர்.

உடனடியாக மெரினா போலீசுக்கும் தகவல் சொல்லவும் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் வந்து 3 பேரையும் தூக்கி போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரி சென்றனர்.

ஆனால், தனுஷ்யா ஏற்கனவே இறந்துவிட்டாள் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். பவித்ராவுக்கும், 3 வயது மகனுக்கும் முதலுதவி சிகிச்சை தரப்பட்டு, மேல் சிகிச்சைக்காக எக்மோர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இப்போதுகூட 2 பேருமே ஆபத்தான நிலைமையில்தான் இருக்கிறார்கள். தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. இதையடுத்து, பவித்ராவின் செல்போனில் இருந்து அவரது கணவனுக்கு போன் பண்ணி போலீசார் தகவல் சொல்லவும், அவரும் விரைந்து சென்னை வந்தார்.

கழுத்தில் பவித்ராவுக்கு பெரிய காயம் உள்ளது. எதுவுமே அவரால் பேச முடியவில்லை. சிகிச்சை தந்தபிறகுதான், அவரிடம் விசாரணை நடத்த முடியும். அப்போதுதான், ஏன் தற்கொலை முயற்சி, ஏன் குழந்தைகளை கொன்றார் என்ற முழு தகவலும் கிடைக்கும் என்கிறார்கள் போலீசார்.

எனினும், ராத்திரி நேரத்தில் பீச்சில் ஒரு பெண் 2 குழந்தைகளையும் கழுத்தை அறுத்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது.