நா ஆஸ்பத்திரி போறேன், ஆஸ்பத்திரி போறேன்.! வடிவேலு பட பாணியில் கொரோனா சிகிச்சைக்கு கிளம்பிய கவுன்சிலர் மீது வழக்கு.!!

750

கர்நாடகா : பெங்களூருவில் உள்ள கவுன்சிலர் ஒருவர் கொரோனா உறுதியானதால் ஆம்புலன்சில் ஏறும் முன் தொண்டர்களுக்கு கையசைத்து சென்றதால் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என வழக்கு பதியப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், பெங்களூர் படராயணபுரா பகுதியிலுள்ள கவுன்சிலர் இம்ரான் பாஷா என்பவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவரை மருத்துவம் அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வந்தது. இதையடுத்து வடிவேல் பட காமெடி போல நான் ஆஸ்பத்திரி போறேன் ஆஸ்பத்திரி போறேன் என வீண் விளம்பரம் போல தொண்டர்களுக்கு கையசைத்துக் கொண்டு ஆம்புலன்சில் ஏறினார்.

ஆம்புலன்ஸ் வந்து வெகு நேரம் ஆகியும், தொண்டர்களுக்கு கை காட்டி தாமதமாக வந்தார். அதிலும் அங்கிருந்த பெண்மணி ஒருவர் காலில் விழந்தத ஆசிர்வாதம் வாங்கி மருத்துவமனைக்கு சென்றார்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, சமூக விலகலை கடைபிடிக்காமல் பிறருக்கு தொற்று ஏற்படும் வகையில் நடந்து கொண்ட இம்ரான் பாஷா மீது போலீசார் சில பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இத்ந வீடியோவால் கவுன்சிலர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Advertisement