118 ரன்கள் வித்தியாசத்தில் Hat-Trick தோல்வி அடைந்த RCB!

470

அனல் பறக்கும் ஐபிஎல் தொடரின் இன்றைய மாலை நேர ஆட்டத்தில் பெங்களூர் அணியும், சன்ரைசர்ஸ் அணியும் ஐதராபாத்தில் பல பரிட்சை மேற்கொண்டனர். இதில் டாஸ் வென்ற பெங்களூர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தனர்.

முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியை காட்டி 20 ஓவர் முடிவிற்கு இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 231 ரன்களை எடுத்தனர்.

பின்பு இந்த இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூர் அணி தொடக்கத்தில் இருந்தே சன்ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழக்கத்தொடங்கினர்.

இறுதியாக பெங்களூர் அணி தங்களது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, மீதி ஒரு பந்து இருக்க 113 ரன்கள் மட்டுமே எடுத்து, 118 ரன்வித்தியாசத்தில் படு தோல்வி அடைந்தது.

இந்த ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்த அணி சன்ரைசர்ஸ், குறைவான ரன்களை எடுத்த அணி, அதிக வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த அணி பெங்களூர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of