புரோ கபடி லீக் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது பெங்களூரு அணி

332

புரோ கபடி லீக் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

12 அணிகள் பங்கேற்ற 6வது புரோ கபடி லீக் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூரு, குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதல் பாதி முடிவில் குஜராத் அணி 16 – 9 என முன்னிலையில் பெற்றது. இரண்டாவது பாதியில் அதிரடி காட்டிய பெங்களூரு அணி வீரர்கள் அடுத்தடுத்து புள்ளிகளை குவித்து அசத்தினர்.

இறுதியில் பெங்களூரு அணி 38-33 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. பெங்களூரு அணியின் பவான் 22 புள்ளிகள் சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். குஜராத் அணி தொடர்ந்து 2வது ஆண்டாக இறுதி போட்டியில் தோல்வி அடைந்து கோப்பையை தவறவிட்டுள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணிக்கு 3 கோடியும், இரண்டாவது இடத்தைப் பெற்ற குஜராத் அணிக்கு 1.8 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of