CAA குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய வங்காளதேச பிரதமர்

146

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் NRC எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்தும் அதே சமயம் ஆதரவாகவும் பல போராட்டங்களும் பேரணிகளும் நடந்து வருகின்றது. தமிழ்நாட்டில் வாசலில் இடும் கோலங்களில் CAAக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதே சமயம் அண்மையில் ஒரு திருமணமாக இருக்கும் தம்பதிகள் தங்களது திருமண அழைப்பிதழில் நாங்கள் CAAவை ஆதரிக்கின்றோம் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த சட்டத்தை குறித்து வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். என்றாலும், அந்த சட்டங்கள் அவசியம் இல்லாதது என்று தெரிவித்துள்ளார்,மேலும் இந்த சட்டத்தை ஏன் இந்திய அரசு நடைமுறை செய்துள்ளது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of