மகேஷ் பாபுவின் வங்கி கணக்கு முடக்கம்

381

18.5 லட்சம் ரூபாய் வரி பாக்கி, தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் வங்கி கணக்கு முடக்கம்

நடிகர் மகேஷ் பாபு, 2007, 2008 ஆண்டுகளில் விளம்பரங்களில் நடித்ததற்கான வரித்தொகையை செலுத்தவில்லை என்றும், 18.5 லட்சம் ரூபாய் வரி நிலுவை வைக்கப்பட்டுள்ளது என்றும் ஹைதராபாத் GST துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாகவே மகேஷ் பாபுவின் 2 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆக்ஸிஸ் வங்கியில் மகேஷ் பாபுவிற்கு சொந்தமான கணக்கிலிருந்து 42 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும், வரி நிலுவைத் தொகையை செலுத்தும் வரை மகேஷ் பாபுவால் வங்கி கணக்குகளை இயக்க முடியாது எனவும், GST துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.