பெண்களை கேலிசெய்த வங்கி ஊழியர்கள் கைது .

169
pondicherry9.3.19

புதுவை வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் பஷீராபேகம் நேற்று இவர் தனது 2 மகள்களை பாரடைஸ் பீச்சுக்கு அழைத்து சென்றார். அங்கு 3 பேரும் கடலில் இறங்கி குளித்தனர்.

அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த 2 வாலிபர்கள் பஷீராபேகத்தின் மகள்களை கிண்டல் செய்தனர். இதனை பஷீராபேகம் தட்டிக்கேட்ட போது அவரை அந்த வாலிபர்கள் தாக்கினர்.

அந்த நேரத்தில் ரோந்து வந்த தவளக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் மற்றும் போலீசாரிடம் பஷீராபேகம் முறையிட்டார்.

இதையடுத்து அந்த வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை சேர்ந்த பாண்டியன் மற்றும் பிரான்சிஸ் என்பதும் இவர்கள் அங்குள்ள தனியார் வங்கியில் ஊழியர்களாக வேலைபார்த்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.