வங்கி பணிகளுக்கான தேர்வு! தமிழ் மீடிய மாணவர்களுக்கு ஒரு “குட் நியூஸ்!”

1320

பொதுத்துறை வங்கிப் பணிகளுக்கான தேர்வை, வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்துகிறது. இந்த தேர்வு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே நடைபெற்று வருகிறது.

இதனால் தாய் மொழியில் கல்வி கற்றவர்களும், தாய் மொழி தவிர பிற மொழி தெரியாதவர்களுக்கும் சிக்கலாக இருந்து வந்தது. இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பது பின்வருமாறு:-

“கிராமப்புற வங்கிப் பணிகளுக்கான தேர்வுகள் ஆங்கிலம், இந்தி தவிர தமிழ், தெலுங்கு உட்பட 13 பிராந்திய மொழிகளிலும் நடத்தப்படும்.

இதனால் வங்கித் தேர்வு எழுதுபவர்களுக்கு எளிமையாகவும் மற்றும் புரியும் விதமாகவும் இருக்கும்”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement