வங்கியில் பணம் திருடப்பட்டால் வங்கியே பொறுப்பு- உயர்நீதி மன்றம் அதிரடி

233

கேரளாவை சேர்ந்த ஒரு நபரின் வங்கி கணக்கில் இருந்து அவருக்கே தெரியாமல் 2 லட்சத்து 40 ஆயிரம் பணம் எடுக்கப்படட்டுள்ளது. இது குறிந்து அவர் வங்கியில் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார் அதற்கு அவர்கள் சரியாக பதில் கொடுக்கவில்லை.

இதனால், அதிர்ப்தி அடைந்த அவர் பணத்தை திருப்பித்தர வேண்டும் என கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பணத்தை பாதிக்கப்பட்டவருக்கு அளிக்க வேண்டும் என உத்திரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து வங்கி சார்பில் கேரளா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் குமார், வாடிக்கையாளருக்கு சேவை செய்யவே வங்கிகள் உள்ளனர்.

மேலும், ஒருவரின் பணம் வங்கியில் இருந்த சட்டவிரோதமாக எடுக்கப்பட்டிருந்தால் அதற்கு வங்கியே பொறுப்பு எனவே பாதிக்கப்பட்டவருக்கு அவரின் பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என உத்திரவிட்டது.