‘ஹிந்தி தெரியாதா.. அப்ப கிடையாது..’ வங்கி மேலாளர் அடாவடி..!

394

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியில், லோன் வாங்குவதற்காக, ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் அங்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு பணியில் இருந்த வங்கி மேலாளர், இந்தி தெரியவில்லை என்பதால், கடன் தருவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், பாமகவின் நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், மத்திய அரசுத்துறை அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் உள்ளூர் மக்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை அரசு செவிமடுக்காததன் விளைவு தான் இத்தகைய கூத்துகள்.

இனியாவது நிலைமை மாற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுமட்டுமின்றி, அந்த மேலாளரை வேறு மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.