“குட் நியூஸ்..” – வங்கிகள் வழக்கம்போல் இயங்கும்..!

494

வங்கிகள், நாளை முதல் வழக்கம் போல, மாலை, 4:00 மணி வரை செயல்படும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி, வங்கிகள், காலை, 10:00 முதல் மதியம், 2:00 மணி வரை மட்டுமே செயல்படும் என, அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வங்கிகள், நாளை முதல் வழக்கம் போல செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது;

வங்கி ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும், கொரோனா வைரஸ் பரவக்கூடாது என்ற நோக்கில், அவசர தேவைகளுக்கு மட்டும், வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வர அறிவுறுத்தப்பட்டனர்.

மேலும், வங்கிகளின் வேலை நேரமும், காலை, 10:00 முதல் மாலை, 2:00 மணி வரை குறைத்திட, மாநில அளவிலான வங்கிகள் குழு, சுற்றறிக்கை அனுப்பியது.

இந்நிலையில், மத்திய அரசு வழங்கும் நேரடி நிவாரண நிதியை, பயனாளிகள் பெறும் வகையில், வங்கிகள் மீண்டும், மாலை, 4:00 மணி வரை செயல்பட, வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இன்று வங்கிகளில் பண பரிவர்த்தனை கிடையாது; நாளை முதல், வங்கிகள் மாலை, 4:00 மணி வரை செயல்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of