பிரதமர் புகைப்படம் கொண்ட பேனர்கள் நீக்கம்.

258
modibanner13.3.19

வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் மாடல் கோட் ஆப் காண்டாக்ட் (Model Code of Conduct) என்ற முறையின் கீழ் தற்போது, டெல்லியில் உள்ள அணைத்து எரிபொருள் விற்பனை நிலையங்களில் உள்ள பிரதமரின் புகைப்படம் கொண்ட பேனர்களை உடனடியாக நீக்க உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அனைத்து இந்திய பெட்ரோலிய விநியோகஸ்தர் சங்க தலைவர் அஜய் பன்சால் பேசியபோது, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் டெல்லி முழுவதும் சுமார் 62 ஆயிரத்து 700 எரிபொருள் விற்பனை நிலையங்களில் உள்ள மோடி அவர்களின் புகைப்படம் கொண்ட பேனர், பிலேக்ஸ் உள்ளிட்டவைகைளை உடனடியா நீக்கவுள்ளதாக தெரிவித்தார்.

டெல்லியில் மே 12ம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது, காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் ஆம்.ஆத்.மி ஆகிய மூன்று முக்கியக்கட்சிகள் அங்கு களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of