தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் விளம்பரப்பதாகைகள் அகற்றம்

87

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள், அமலுக்கு வந்துள்ளதால், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் மற்றும் பதாகைகள் அகற்றப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், தஞ்சாவூர், சேலம், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும், கட்சி சார்பில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றும் பணிகளும், அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை மறைக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.