சிறுபான்மையினர் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகளுக்கே சிறுபான்மை அந்தஸ்து வழங்க தடை

277

50 சதவீத சிறுபான்மையினர் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகளுக்கே சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சிறுபான்மை பள்ளிகள் அந்தஸ்து வழங்குவதற்கான கூடுதல் விதிகள் தொடர்பான அரசாணையை, தமிழக பள்ளிக்கல்வித் துறை கடந்த ஏப்ரல் வெளியிட்டது. அதில் சிறுபான்மை பள்ளிகளில் 50 சதவீத சிறுபான்மையின மாணவர்களை சேர்க்க வேண்டும் என்றும், மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை அரசுக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.