தனி மனித வாழ்க்கையிலும் வெளிப்படை தன்மை தேவை

443
Banwarilal-purohit

அரசு நிர்வாகம் மட்டுமல்லாமல், தனி மனித வாழ்க்கையிலும் வெளிப்படை தன்மை தேவை என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், நாம் வெளிப்படையாக இருக்கும் போது, நமது தவறுகள் பிறருக்கு தெரியும் என்பதால், அதனை திருத்திக்கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

எக்காரணம் கொண்டும் மக்கள் பணத்தை வீணடிக்க கூடாது என்று கேட்டுக்கொண்டார்.

தொழில் மற்றும் கல்வித்துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்குவதாகவும், தமிழகத்தில் ஒரு நிமிடத்துக்கு 3 கார்களும், 6 நொடிகளுக்கு ஒரு இருசக்கர வாகனமும் தயாரிக்கப்படுவதாக தெரிவித்தார்.