ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மத்திய அரசின் தரகர் – வைகோ

522

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மத்திய அரசின் தரகராக செயல்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய நீதிபதி புகழேந்தியின் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 3 மாணவிகள் உயிரிழப்புக்கு காரணமான அதிமுகவினரை விடுதலை செய்ய கையெழுத்து போடும் ஆளுநர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறைதண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய மறுப்பது அவர் மத்திய அரசின் தரகராக செயல்படுவதை தெளிவுப்படுத்துவதாக விமர்சித்தார். மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை வலியுறுத்தி வரும் 24ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of