மேகதாது விவகாரம் – ஆளுநர் இன்று டெல்லி பயணம்

247
Banwarilal-Purohit

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை சந்திக்க உள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக இன்று டெல்லி செல்கிறார்.
பிரதமர் உடனான சந்திப்பின் போது மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் மற்றும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளார்.