ஆசிரியர் தினத்தையொட்டி பன்வாரி லால் புரோஹித் வாழ்த்து

111

ஆசிரியர் தினத்தையொட்டி தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆசிரியர்களின் அனைத்து உன்னத முயற்சிகளும் வெற்றிபெற விரும்புவதாக கூறியுள்ளார். மாணவர்களின் வெற்றிக்கு பாடுபடும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும், ஆசிரியர் தினத்தில் கற்பித்தல் சமூகத்தின் முயற்சிகளை அங்கீகரிப்போம் எனவும் கூறியுள்ளார்.

ஆசிரியரால் வழங்கப்படும் பயிற்சியே ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது என்று கூறியுள்ள ஆளுநர் புரோஹித், ஆசிரியரின் ஒவ்வொரு சைகையும், செயலும் மாணவர்களின் ஆளுமையை வளர்க்கின்றன என புகழாரம் சூட்டியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of