தமிழகம் முழுவதும் பார்கள் மூடப்படும்! – குடிமகன்கள் அதிர்ச்சி!!

473
tasmak

கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பிரபாகரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பிரபாகரன் கூறியிருப்பதாவது:-
‘கோவை மாவட்டத்தில் பல டாஸ்மாக் கடைகள், சட்டவிரோதமாக செயல்படுகின்றன. இந்த நிலை தமிழகம் முழுவதும் நிலவுகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே இந்த பார்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மேலும் சில டாஸ்மாக் கடைகளில் கலப்பட மதுக்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே, அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும்;, தான் கொடுத்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக, அனுமதியின்றி செயல்படும் பார்களை உடனடியாக இழுத்து மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், இதுகுறித்த அறிக்கையை வருகிற 20-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.