செல்போன் பேட்டரி கீழே கிடந்தா எடுக்காதீங்க! சிறுவர்களுக்கு நேர்ந்த விபரீதம்!

851

ஆந்திராவில் சித்தூர் நகரில் குரபலகோட்டா பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த சகோதரர்கள் ஷேக் சையது (வயது 10) மற்றும் ஷேக் மவுலாலி (வயது 8).

இவர்கள் தங்களது வீட்டின் அருகே கிடந்த குப்பை கிடங்கில் இருந்து மொபைல் போன் பேட்டரியை எடுத்து விளையாடி உள்ளனர். வீங்கியிருந்த அந்த பேட்டரி வெயிலில் சூடேறி இருந்துள்ளது.

இந்நிலையில், திடீரென அது வெடித்து உள்ளது. இதனால் சிறுவர்களின் முகம், கைகள் உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் திருப்பதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதன்பின் அங்கிருந்து ரூயா அரசு பொது மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of