முரளி விஜய், ரெய்னாவுக்கு ‘டாட்டா’ சொன்ன bcci

178

நடப்பு ஆண்டுக்கான கிரிக்கெட் ஊதிய ஒப்பந்த விவரங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான bcci அறிவித்துள்ளது.

“ஏ ப்ளஸ்” பிரிவான 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் பிரிவில் விராட் கோலி, ரோகிச் சர்மா, பும்ரா ஆகிய 3 பேர் மட்டுமே இடம் பிடித்துள்ளனர்.

“ஏ” பிரிவில் தோனி, ஜடேஜா, அஸ்வின் தவான் உள்ளிட்ட 11 பேர் இடம்பிடித்துள்ளனர். இவர்களுக்கு தலா ரூ 5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.

“பி” பிரிவில் உமேஷ் யாதவ், ராகுல் உள்ளிட்ட 4 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு 3 கோடி ரூபாய் சம்பளம்.1 கோடி ரூபாய் சம்பளம் பெறும் “சி” பிரிவில் 6 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த பிரிவில் இருந்து சுரேஷ் ரெய்னா, முரளிவிஜய் உள்ளிட்டோர் எந்த பிரிவிலும் இடம் பெறவில்லை.

மூன்று விதமான கிரிக்கெட் தொடர்களிலும் அதிரடியை கட்டியவர்கள் முரளி விஜய், சுரேஷ் ரெய்னா. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றனர்.

அதையும் தாண்டி அவர்களுக்கு கொடுத்த வாய்ப்புகளை அவர்களால் சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இந்தாண்டு நடைப்பெரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால், bcci வெளியிட்ட சம்பள பட்டியலில் இவர்களின் பெயர் நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பள பட்டியலில் இவர்கள் பெயர்களை நீக்கியதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியில் இவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்பதை கிரிக்கெட் வாரியம் சொல்லாமல் சொல்லி இருக்கின்றது.