”மிகப்பெரிய சதி, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்”! தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்!

922

உச்சநீதிமன்ற முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்றத்தில் அவசர பிரச்சினையாக விவாதிக்கப்பட்டது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்ற சிறப்பு அமர்வு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பொய்யான தகவல்களை பரப்பும் பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இது மிரட்டும் செயல் என்றும், இது குறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை என்றும் இதனை ஊடகங்களின் பொறுப்பில் விடுவதாகவும், ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுக்கு பார் கவுன்சில் ஆப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of