விளக்கு ஏற்ற சொன்ன மோடி.. எச்சரிக்கை தகவலை கொடுத்த ராணுவம்..

1965

நாளை இரவு 9 மணிக்கு வீடுகளில் எரியும் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு, 9 நிமிடங்களுக்கு ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, டார்ச் லைட் அல்லது உங்கள் செல்போன் போனில் டார்ச் ஒளியை ஏற்ற பிரதமர் மோடி அறுவுறுத்தினார்.

இதுபற்றி இந்திய ராணுவம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நாளை இரவு விளக்கு அல்லது மெழுகுவர்த்தி தீபம் ஏற்றும் முன்பு பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் ஆல்கஹால் கலந்த சேனிட்டைசர்களை கொண்டு கைகளை தூய்மைப்படுத்துவதற்கு பதில் சோப்புகளை கொண்டு கை கழுவுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளது.

கைகளை தூய்மைப்படுத்த உதவும் ஹேண்ட் சேனிட்டைசர்களில் ஆல்கஹால் 60 சதவீதத்திற்கு மேல் இருப்பதால், எளிதில் தீப்பற்றக் கூடிய ஆபத்து இருப்பதால், இந்த அறிவுரையை இந்திய ராணுவம் வழங்கியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of