வீட்டுக்குள் புகுந்து ஃபிரிட்ஜை சூறையாடி இறைச்சியை தின்ற கரடி..! – சிசிடிவி-யின் மிரட்டல் காட்சி..!

392

அமெரிக்காவில், நள்ளிரவு வீட்டுக்குள் நுழைந்த கரடி ஒன்று, குளிர்சாதன பெட்டியை சூறையாடிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அண்மையில் கலிபோர்னியாவில் உள்ள ‘ஹாலிடே ஹோம்’ ஒன்றுக்குள் நள்ளிரவு கரடி ஒன்று நுழைந்தது. பசியுடன் அங்குமிங்கும் சுற்றித்திரிந்த கரடி, இருட்டில் குளிர்சாதன பெட்டியை தேடி கண்டுபிடித்து அதன் அருகே சென்றது.


பின்னர் மனிதர்களை போல், அதனை லாவகமாக திறந்த கரடி, அங்கிருந்த இறைச்சியை எடுத்து வந்து, நடுவறையில் படுத்தபடி சாப்பிட்டது. வீட்டுக்குள் வினோத சத்தம் கேட்பதை அறிந்த வீட்டிலிருந்த இரு சிறுவர்கள் தங்களது ஸ்மார்ட் வாட்ச் மூலம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் அங்கு வந்து வான் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி, வீட்டில் உலாவிக்கொண்டிருந்த கரடியை வெளியேற்றினர்.

இந்த சம்பவம் முழுவதும் வீட்டிலிருந்த சிசிடிவி காட்சியில் தெளிவாக பதிவான நிலையில், அதனை வலைதளத்தில் பதிவிட்ட காவல் துறையினர், விலங்குகள் வீட்டுக்குள் நுழைவதை தவிர்க்க வீடுகளை பூட்டிவைத்து தூங்கவும், தகுந்த பாதுகாப்புடன் செயல்படவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of