மோடிக்கு அறிவுரை வழங்கிய அழகி..! சிரிப்பொலியால் அதிர்ந்த அரங்கம்..!

765

பசு மாடுகளின் பாதுகாவலர்கள் என்ற பெயரில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அப்பாவி மக்கள் தாக்கப்படுகின்றனர். சில சமயங்களில் இது கொலைவெறித் தாக்குதலாகவும் மாறி விடுகின்றன.

இதற்கு பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் நாகலாந்தின் தலைநகரமான ஹோமியோ பகுதியில் மிஸ் ஹோமியோ அழகிப்போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில், கேள்வி பதில் சுற்று நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்டு அழகி ஒருவரிடம், பிரதமர் மோடியுடன் பேசுவதற்கு அழைக்கப்பட்டால் அவரிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த அந்த பெண், மாடுகளை விட பெண்கள்மீது அதிக கவனம் செலுத்துங்கள் என்று அறிவுரை வழங்குவேன் எனத் தெரிவித்தார். இவரின் இந்த பதிலை கேட்டு, அங்கிருந்தவர்கள் அனைவரும் பெரும் சிரிப்பொலியை எழுப்பினர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் கடந்த சில நாட்களாக வைரலாக பரவி வருகிறது.

newest oldest most voted
Notify of
Velusamy
Guest

நனறி