“ஆயுஷ்மான் பாரத்” எனும் மருத்துவ பாதுகாப்பு திட்டத்தை துவக்கி வைத்தார் கிரண்பேடி

683

மத்திய அரசின் “ஆயுஷ்மான் பாரத்” எனும் மருத்துவ பாதுகாப்பு திட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி துவக்கி வைத்தார்.
vo-vt
நாடுவழுதுமுள்ள 50 கோடி ஏழை, எளிய மக்கள் இலவசமாக மருத்துவ சேவைகளை பெறும் வகையில் ஆயுஷ்மான் பாரத் எனும் மருத்துவ பாதுகாப்பு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் ஒராண்டிற்கு ஒரு குடும்பம் 5 லட்சம் ரூபாய் வரை அரசு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகளை இலவசமாக பெற முடியும்.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடங்கி வைத்தார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு திட்டத்திற்கான அடையாள அட்டையினை வழங்கி, இத்திட்டத்தின் பயன்கள் குறித்து விளக்கி கூறினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். புதுச்சேரியில் இத்திட்டம் மூலம் ஒரு லட்சம் ஏழை, எளிய குடும்பங்கள் பயன்பெறு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement