டுவிட்டர் டிரெண்டில் இடம்பிடித்த “Beef4Life”

512

ஒவ்வொரு நாளும் டுவிட்டரில் புது புது விஷயங்கள் டிரெண்டாகி வருகின்றது. ஒரு சில நேரங்களில் சம்பவத்திற்கு ஏற்ப பிரச்சனைகள் பூதாகரமாக மாறும் பொழுது டுவிட்டரில் சமூக வலைதள வாசிகள் டிரெண்ட் செய்வது வழக்கம்.

அந்த அடிப்படையில், நேற்று மாட்டிறைச்சி உண்டதற்காக நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்து மக்கள் கட்சியினரால் கத்தியால் குத்தப்பட்டு கொலை வெறி தாக்குதலுக்கு ஆளானார்.

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்த தாக்குதலில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தாங்களும் மாட்டிறைச்சி பிரியர்கள் தான் என்ற அடிப்படையில் டுவிட்டர் மற்றும் முகநூலில் #Beef4life, #WeLoveBeef , #BeefForLife போன்ற ஹேஷ் டாக்குகளை பரப்பி வருகின்றனர். இந்த ஹேஷ்டாக் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

 

Advertisement