உதவியாளருக்கு 47 மாத சிறை தண்டனை .

513
trump9.3.19

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்றது. அதில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சி சார்பில் ஜனநாயக கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிட்டனர். தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிரம்ப் வெற்றிபெற்றார்.

தேர்தல் விவகாரத்தில் டிரம்ப் வெற்றியில் ரஷியா தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அது குறித்து அதிபரின் சிறப்பு கவுன்சில் விசாரணை ராபர்ட் முல்லர் தலைமையில் நடைபெற்று வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்ப் பிரசார குழு அமைத்து இருந்தார். அதில் 6 ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பால்மனா போர்ட்டும் ஒருவர். இவர் டிரம்பின் உதவியாளராகவும் இருந்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையீடு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் பால்மனாபோர்ட்டுக்கு 47 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இவர் அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக உக்ரைன் அரசியல்வாதிகளிடம் இருந்து 55 மில்லியன் டாலர் பணத்தை பெற்று வரி ஏய்ப்பு மற்றும் வங்கி மோசடி செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. அதை பால்மனாபோர்ட் மறுத்தார்.

கடந்த 10 ஆண்டுகளாக உக்ரைன் அரசியல்வாதிகளுக்காக பணியாற்றியதாகவும், தனக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் மறுத்தார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறி அவருக்கு 47 மாதங்கள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இதுதவிர இவர் மீது வாஷிங்டன் கோர்ட்டில் அடுத்த வாரம் தீர்ப்பு வெளியாக உள்ளது. மேலும் பால்மனாபோர்ட் வழக்கில் இவருடன் தேர்தல் பணியாற்றிய ரிக்கேட்ஸ் மற்றும் 4 உதவியாளர்களும் தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of