சாட்டையை சுழற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் – அகற்றப்பட்ட விளம்பர பேனர்கள் – பாராட்டும் பொதுமக்கள்

633

கடந்த 04-09-19 அன்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் கோ.பிரகாஷ், அனுமதி இல்லாமல் விளம்பர பேனர்கள் வைத்தால் மாநகராட்சி சட்டம் 1919-ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

விளம்பர பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்து கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தாலும் கூட சென்னையின் பிரதான பகுதிகளான தி.நகர், வடபழனி, கோடம்பாக்கம், அசோக் நகர் போன்ற பகுதிகளில் எக்கச்சக்கமான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கடுமையான உத்தரவு பிறப்பித்தாலும் கூட அதிகாரிகள் அதை பொருட்படுத்தாமல் இருந்தனர். ‘காற்றில் பறக்கும் கமிஷனர் உத்தரவு கண்டுகொள்ளாத அதிகாரிகள்’ என்ற தலைப்பில், சென்னை வடபழனி பகுதியில் கமிஷனர் பிரகாஷின் உத்தரவையும் மீறி பல விளம்பர பேனர்கள் இருப்பதை சத்தியம் டிஜிட்டல் பக்கத்தில் சுட்டிக்காட்டி இருந்தோம்.

விஷயம் கமிஷனர் பிரகாஷின் கவனத்திற்கு சென்றதும், குறிப்பிட்ட அதிகாரிகளை அழைத்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி, கடுமையாக எச்சரித்திருக்கிறார். 09-09-19 அன்று மாலை, ஆணையாளர் பிரகாஷின் உத்தரவின் படி சென்ற ஸ்பெஷல் டீம் வடபழனி மற்றும் கோடம்பாக்கம் பகுதிகளில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த அத்தனை விளம்பர பேனர்களையும் அகற்றியுள்ளனர்.

சாட்டையை சுழற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷின் இந்த துரித நடவடிக்கையை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டுகின்றனர். வெல்டன் கமிஷனர் சார்.

Advertisement

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Anand Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Anand
Guest
Anand

Super….