தட்டச்சு இந்திரம் மூலம் அபிநந்தன் ஓவியம்.., பெங்களூர் ஓவியர் அசத்தல்

399

காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 இந்திய துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது ஒரு இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் சென்ற விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் சிறைபிடித்தது. இந்திய அரசின் முயற்சியாலும், உலக நாடுகளின் உதவியாலும் பாதுகாப்புடன் மீட்கப்பட்டு தாயகம் திரும்பிய அபிநந்தன் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடைமுறைகள் சமீபத்தில் முடிந்ததையடுத்து அவருக்கு ஒருமாதம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் முகத்தை தட்டச்சு இயந்திரம் மூலம் பெங்களூரு நகரை சேர்ந்த ஓவியரான ஏ.சி. குருமூர்த்தி என்பவர் ஓவியமாக உருவாக்கியுள்ளார்.

அபிநந்தன் உண்மையான கதாநாயகன். நமது நாட்டுக்கு அவர் மரியாதை சேர்த்துள்ளார். எனவே, அவரை கவுரவிக்கும் விதமாக இந்த ஓவியத்தை தட்டச்சு இயந்திரம் மூலம் நான் உருவாக்கியுள்ளேன் என தெரிவித்தார்.