175 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கியது பெங்களூரு அணி

278

விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான 54-வது லீக் போட்டி இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ஐதராபாத் அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக சகாவும், கப்திலும் களமிறங்கினர். 5-வது ஓவரை எதிர்க்கொண்ட சகா 20 ரன்னிலும்,
8-வது ஓவரை எதிர்க்கொண்ட கப்தில் 30 ரன்னில் கேட்ச் கொடுத்து வெளியேறினர்.

ஆட்ட நேர இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 175 ரன் எடுத்தது. கேன் வில்லியம்சன் 70 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

175 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 8 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 61 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of