குடும்ப வறுமை: பார்வையற்ற மகனை கொன்ற தாய்

925

குடும்ப வறுமையினால் பார்வையற்ற மகனை பெற்ற தாயே கொன்ற சோக சம்பவம்

சென்னை:  பரங்கிமலையில் வசித்து வரும் பத்மா எம்பவர் கணவரால் கைவிடப்பட்டவர். இதனையடுது பாத்மா தன் மகன் பரத்துடன் வசித்து வந்துள்ளார்.

குடும்ப வறுமை காரணமாக அவதிபட்ட பத்மா தனது பார்வையற்ற மகனை ஆளாக்க சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் பரத்தின் முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி கழுத்தை நெறித்து கொலை செய்தார்.

பின்னர், தானும் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்தபோது தூக்கிட்ட கயிறு அறுந்து விழுந்ததால் பத்மா உயிர்பிழைத்தார்.

பின்னர், பத்மாவை போலீசார் கைது செய்தனர். இந்த சோக சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்

Advertisement