இந்த படம் நல்லாவே இல்ல..? பாரதிராஜவின் பேச்சிற்கு ரஜினி கொடுத்த பதில்..!

1019

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியது பாலசந்தர் என்றால், அவரை முதன்முதலில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் கதாசிரியர் கலைஞானம். இவருக்கு கடந்த 14-ஆம் தேதி அன்று, பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில், ரஜினிகாந்த், பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பாரதிராஜா, நடிகர் ரஜினி உடனான தன்னுடைய அனுபவங்களை கூறினார்.

அவர் பேசியது பின்வருமாறு:-

“நான் ரஜினியை மனதளவில் அடிக்கடி காயப்படுத்தியிருக்கிறேன். அவர் ஒரு மிகப்பெரிய ஆன்மா. எந்த விஷயத்தையும் சரியான கலவையில் கொடுத்தவர்.

குரு சிஷ்யன் படம் முடிந்த சமயம் ரஜினி என்னை அந்த படத்தை பார்க்க அழைத்தார். நானும் சென்று படத்தை பார்த்தேன்.

படம் என் டேஸ்ட்டுக்கு இல்லை. அதனால் படம் பிடிக்கவில்லை என்றேன். அப்படியா படம் அப்ப கண்டிப்பா ஹிட் ஆகிவிடும் என்றார். அந்த அளவு என்னையும், மக்களையும் படித்து வைத்திருக்கும் வித்தை தெரிந்தவர் ரஜினி.”

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of