பாசத்திற்குரிய பாரதிராஜாவின் “மீண்டும் ஒரு மரியாதை”

371

‘முதல் மரியாதை’ தமிழ் திரையுலகில் யாராலும் மறக்க முடியாத ஒரு திரைப்படம், இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் பல வெற்றி படங்களில் ஒன்று. நடிகர் திலகம் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படம் அக்காலத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் புதிய படம் தான் ‘மீண்டும் ஒரு மரியாதை’.

இப்படம் எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும், அவற்றை நேர்மறையாக எதிர்கொண்டு, போராடி, வெற்றிபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு தன்முனைப்புத் திரைப்படமாக தற்போது உருவாகியுள்ளது.

Image-1

வெளிநாட்டில் ஒரு வயதான ஆணும், ஒரு இளம் பெண்ணும், அவர்களுது உறவுகளால், உறவில் ஏற்பட்ட சிக்கல்களால் பாதிக்கப்படும் போது, அதனை அவர்கள் எவ்வாறு எதிர்கொண்டு, போராடி, வெற்றிக் கொள்கிறார்கள் என்பதை பாரதிராஜா தனது பாணியில் இந்த மீண்டும் ஒரு மரியாதை படத்தை இயக்கியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of